Categories: சினிமா

அப்பன் மவனே வாடா.! மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்..!

வெளியிட்டது

விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகனுக்காக உருக்கமாக கவிதை ஒன்றையும் எழுதி இருக்கிறார். விக்னேஷ் சிவனின் மகனும் அவரின் முகத்தில் முத்தமிடுவது போன்று படுத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார். இந்த அழகான புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரை உலகில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் இவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பின்னர் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தையும் இவர் இயக்கியிருந்தார். அதன் பின்னர் பாவ கதைகள் படத்தில் லவ் பண்ணா உட்ரனும் என்கிற படத்தை இயக்கினார். கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை தனது மனைவி நயன்தாராவை வைத்து இயக்கினார். ஏகே 62வை விக்னேஷ் அடுத்து இயக்க இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக படத்தில் இருந்து விலகி இருந்தார்.

அப்பன் மவனே வாடா.! மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்..! 1

 

அதுமட்டுமில்லாமல் ரவுடி பிக்சர்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தனது மனைவியுடன் இணைந்து நடத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த நிறுவனத்தின் மூலமாக நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி, கனெக்ட் ,காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவுடன் அவருக்கு 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக இருவரும் வலம் வந்தனர். கோவில்களுக்கு செல்வது, அவுட்டிங் செல்வது, டூர் செல்வது என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களான விஷயத்தை அறிவித்து இருந்தனர். இது அப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர்.


தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் முகத்தை மறைத்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அதேபோல இன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில், “என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு நேரம் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வழிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக் கொடுக்கிறது” என்று பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அந்த குழந்தை விக்னேஷ் சிவன் முகத்தில் படுத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறது. அந்த அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்