Categories: சினிமா

6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ள நயன்தாரா.! ஆதாரங்களை சமர்ப்பித்த விக்னேஷ் சிவன்

வெளியிட்டது

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரத்திற்கு தற்போது இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட விவகாரம் பூதாகரமாகியது. இந்த நிலையில் இது தொடர்பாக அவர்கள் அரசு அமைத்த குழுவிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் சென்னையில் மகாபலிபுரத்தில் ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்து, ஸ்பெயின் என ஊர் சுற்றி வந்தனர். பின்னர் சென்னை திரும்பிய அவர்கள் இருவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ள நயன்தாரா.! ஆதாரங்களை சமர்ப்பித்த விக்னேஷ் சிவன் 1

 

இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஷ் சிவன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புகைப்படங்களை வெளியிட்டு நானும் நயன்தாராவும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்று அறிவித்திருந்தார். திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டை குழந்தைகள் எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். மேலும் இவர்கள் வாடகை தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்று இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் இந்த விஷயம் மிக பூதாகரமானது. ஏனென்றால் வாடகை தாயும் பெறுவதற்கு பல சட்ட திட்டங்கள் இந்தியாவில் இருப்பதால் இவர்கள் இதையெல்லாம் பின்பற்றி தான் குழந்தையைப் பெற்றார்களா என்ற விவாதம் எழுந்தது. இதை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களையும் அந்த குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து இருப்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும், ஜூன் மாதம் தான் வாடகை தாய் சட்டம் வந்ததாகவும், இதனால் இந்த சட்டம் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: News18 Tamilnadu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்