Categories: சினிமா

என் கைய புடிச்சிக்கோ நயன்..மஞ்சள் பட்டு புடவையில் கணவருடன் திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பெரிய ரிசார்ட்டில் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர். முதலில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணம் பின்னர் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் சென்னைக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு தமிழ் முண்ணனி நடிகர்கள் பலரும் குடும்பத்துடன் வந்து இருந்தனர். ரஜினி, விஜய், சூர்யா, ஷாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பலர் கலந்து கொண்டனர். வந்தவர்களுக்கு 27 வகையான மெனுவுடன் பலே விருந்து பரிமாறப்பட்டது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

என் கைய புடிச்சிக்கோ நயன்..மஞ்சள் பட்டு புடவையில் கணவருடன் திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா 1

திருமணத்தில் சிகப்பு நிற லெஹங்கா உடையுடன் கழுத்தில் 7 அடுக்கில் பல விலையுயர்ந்த கற்களுடன் கூடிய நகைகளை அணிந்து இருந்தார் நயன்தாரா. அதே போல் விக்னேஷ் சிவனும் வேஷ்டி, குர்தா, துண்டு அணிந்திருந்தார். சரியாக காலை 10.25க்கு நயன்தாரா கழுத்தில் தாலி அணிவித்தார் விக்னேஷ். பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் என சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கினர். இந்த செயலால் அவரது ரசிகர்கள் அவரை மனதார வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது திருமணம் முடிந்து இருவரும் நேராக திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு புது பொண்ணும், மாப்பிள்ளையும், சாமி தரிசனத்திற்காக லைனில் காத்து இருக்கின்றனர். திருப்பதியில் வைத்து திருமணம்தான் செய்ய முடியவில்லை, ஆனால் திருமணம் முடிந்த கையோடு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Youtube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்