Categories: சினிமா

அஜித் ரசிகர்களுடன் அமர்ந்து துணிவு படத்தை பார்த்து ரசித்த நயன்தாரா..! வெளியான புகைப்படங்கள்

வெளியிட்டது

நடிகை நயன்தாரா இன்று அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படத்தை பார்த்திருக்கும் புகைப்படம் மற்றும் ஸ்டேட்டஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. வாடகைத்தாய் முறையில் இந்த குழந்தைகளை பெற்றிருப்பதாக நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில் இன்று துணிவு படத்தை பார்க்க சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கிற்கு சென்று இருக்கிறார் நயன்தாரா. அங்கு அஜித் ரசிகர்கள் உடன் இணைந்து அவர் படத்தை பார்த்து இருக்கிறார்.

அஜித் ரசிகர்களுடன் அமர்ந்து துணிவு படத்தை பார்த்து ரசித்த நயன்தாரா..! வெளியான புகைப்படங்கள் 1
இந்த பொங்கலுக்கு தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கும் இரண்டு படங்கள் தான் வாரிசு மற்றும் துணிவு. நாளை முதல் விடுமுறை தொடங்குவதாலும், மற்றும் வார இறுதி நாள் என்பதாலும் நாளை இரு படங்களின் வசூல் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களும் படத்தை சென்று பார்த்து தங்களது விமர்சனங்களை கூறிவரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றுக்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அங்கு அவர் ரசிகர்களுடன் இணைந்து துணிவு படத்தை பார்த்திருக்கிறார். அப்போது முன்னிருக்கையில் இருந்த பெண் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். எனக்கு பின்னால் லேடி சூப்பர் ஸ்டார் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் என்னால் முழுமையாக துணிவு படத்தை பார்க்க முடியவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் நயன்தாரா மீது தான் இருந்தது இது ஒரு அழகான மெமரி என்று பதிவிட்டு இருக்கிறார்.


நயன்தாராவும் தனது instagram ஸ்டோரியில் துணிவு படத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்து ஒரு கிங்கை நான் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு அமேசிங் ஆன அனுபவமாக இருக்கிறது. துணிவு படத்தில் இதுவரை பார்த்திராத அஜித்குமாரை பார்க்கலாம். அனைத்து விதத்திலும் இந்த படம் பிளாக்பஸ்டர் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத்திற்கும் படக்குழுவினருக்கும் எக்ஸலண்ட் ஒர்க் என்றும் பாராட்டி அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்