நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் – போனி கபூர் கூட்டணியில் தல அஜித் நடிக்க உள்ளார்.வலிமை என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் வலிமை படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வலிமை படத்தின் டைட்டிலை அறிவித்த சில மணி நேரத்திலே நஸ்ரியா புதிய ஹேர் ஸ்டைலுடன் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டார். அதை கண்ட நெட்டிசன்கள், நஸ்ரியா வலிமை படத்தில் நடிக்கிறார் என்று செய்தியை பரப்ப ஆரம்பித்துவிட்டனர். நஸ்ரியா, தான் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்றும் ஒரு முறை செய்தியாளர்கள் பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தில் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் விஸ்வாசம் மற்றும் என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தில் காவல் துறை அதிகாரியாக அஜித் நடிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.