புதிதாக வீடு கட்டி வரும் நீலிமா ராணி.! பூமி பூஜையுடன் தொடங்கிய பணிகள்.! நீலிமா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் நீலிமா ராணி தற்போது புதிய வீடு ஒன்றை கட்ட இருக்கிறார். அதற்கான பூமி பூஜை இன்று தொடங்கி இருக்கிறது. அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நீலிமா. தமிழ் சின்னத்திரை உலகில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நீலிமா ராணி. இவர் கதாநாயகியாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்கள், துணை வேடங்கள், வில்லி வேடங்கள் என்று எந்த வேடங்கள் கொடுத்தாலும் அதை ஏற்று கச்சிதமாக நடித்து அசத்தி விடுவார்.

புதிதாக வீடு கட்டி வரும் நீலிமா ராணி.! பூமி பூஜையுடன் தொடங்கிய பணிகள்.! நீலிமா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.! 1

இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார். கமல் நடித்த தேவர்மகன் படத்தில் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

நீலிமாவிற்கும் அவருடன் ஒரு சீரியலில் நடித்து வந்த அஸ்வின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த பொழுது யாரும் செய்ய முடியாதது போல் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.

அதில் தாமரை மேல் கர்ப்பிணியாக அம்மன் அமர்ந்திருப்பது போல வேடமிட்டு போட்டோ ஷூட்டுகளை நடத்தினார் நீலிமா. தாய்மையை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த போட்டோ ஷூட்டுகள் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இரண்டாவதாக அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு இளவரசி பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார் நீலிமா. புத்த பூர்ணிமா தினத்தில் பிறந்ததால் தனது மகளுக்கு அத்வைதா என்று பெயர் சூட்டி இருந்தார்.


இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நீலிமா அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று புதிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் புதிய வீடு கட்ட இருப்பதாகவும் அதற்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரத்தநாடு கிராமத்தில் அவர் வீடு கட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்