நடிப்பை கைவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி.! திறப்பு விழா புகைப்படங்கள்.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தற்போது பெண்களுக்காக புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிப்பை கைவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி.! திறப்பு விழா புகைப்படங்கள்.! 1
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நீலிமா ராணி.


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி, கோலங்கள், மெட்டிஒலி, தலையணைப் பூக்கள், போன்ற பல நாடகங்ளில் நடித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி, நீலி போன்ற நாடகங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 21 வது வயதில் துணை இயக்குனராக இருந்த இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்


கடைசியாக நீலிமா ராணி ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோ கௌதம் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த பலரது வரவேற்பையும் பெற்றிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் புதிய தொழில் தொடங்கியிருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்.

சென்னையில் ஆர் கே சாலையில் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ என்கிற அழகு நிலையத்தை தொடங்கி இருக்கிறார். பெண்களுக்காக பிரத்யேகமாக இந்த அழகு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த கடையின் திறப்பு விழாவை எஸ்பிபி யின் மகன் எஸ்பிபி சரண் வந்து திறந்து வைத்துள்ளார். மேலும் நடிகர்கள் நடிகைகள் பலரும் நேரில் வந்து நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீலிமாவின் இந்த புது முயற்சிக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்