நீலிமாவை பார்த்து இன்ஸ்டாகிராமில் கொச்சையாக கேள்வி கேட்ட நபர்..தரமான பதிலடி கொடுத்த நீலிமா

வெளியிட்டது

இன்ஸ்டாகிராமில் தன்னிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பியவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நீலிமா ராணி. கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா.தமிழ் சின்னத்திரையில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். கதாநாயகி வேடம் மட்டுமில்லாமல் குணச்சித்திரம், துணை வேடங்கள், வில்லி கதாபாத்திரம் என எந்த வேடத்தை ஏற்றாலும் நடித்து அசத்திவிடுவார் நீலிமா ராணி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றி வருகிறார் நீலிமா ராணி. இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். மெட்டி ஒளி, அரண்மனை கிளி போன்ற நாடங்களில் நடித்துள்ளார்.

நீலிமாவை பார்த்து இன்ஸ்டாகிராமில் கொச்சையாக கேள்வி கேட்ட நபர்..தரமான பதிலடி கொடுத்த நீலிமா 1

இதனிடையே நீலிமாவிற்கும் அவருடன் சீரியலில் நடித்து வந்த அஸ்வின் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூத்த பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. பின்னர் நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் போதே அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வந்தார். யாரும் செய்யாத வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட்டுகளை செய்து வந்தார். தாமரை மேல் கர்ப்பிணியாக அம்மன் அமர்ந்து இருப்பது போல வேடமிட்டு போட்டோ ஷூட்டுகளை நடத்தி வந்தார் நீலிமா. தாய்மையை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்டதாக நீலிமா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீலிமாவுக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இளவரசி குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். தனது மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டு தனது மகளின் பெயர் அத்வைத்தா என்றும் அறிவித்து இருந்தார் நீலிமா. சோசியல் மீடியாவில் எப்போதும் மிக ஆக்டிவாக இருக்கும் நீலிமா நேற்று கேள்வி பதில் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ஒருவர் உங்கள் உள்ளாடை அளவு என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு நான் என் உன்னிடம் சொல்ல வேண்டும்? நீ உள்ளாடை விற்கிறாயா என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார். நீலிமா போன்ற பிரபலங்களுக்கு கூட இது போன்ற டார்ச்சர்கள் வெளிப்படையாக வருவது வேதனைக்கு உரியது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்