நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபிநாத் ஒருவரிடம் கோபமாக திட்டுவது போன்ற ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் இருக்கும்போதிலும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களில் முதன்மை இடம் வகிக்கிறது நீயா நானா. எதிரெதிர் கருத்துக்களை உள்ளவர்களை எதிர் எதிரில் அமர வைத்து அவர்களுக்குள் விவாதம் நடத்தி, அதற்கு ஒரு தீர்வும் சொல்லும் விவாத நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. இது பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதை கோபிநாத்தே பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார் கோபிநாத். எத்தகைய எதிர் எதிரில் கருத்துக்கள் வரும்போதிலும் அதை நிதானமாக கையாண்டு அதற்கு சரியான தீர்வு ஒன்றையும் கொடுத்து பலரையும் நெகிழ வைத்து விடுவார் கோபிநாத். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் ஒரு தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா படங்கள் வரும்போது முதல் நாளே பார்ப்பவர்கள் மற்றும் அந்த முதல் நாள் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள் என்கிற ரீதியில் இரு தரப்பினர் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் சினிமா கலைஞர்களுக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கிறது. அதுவும் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை கெத்தாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் பலர். குறிப்பாக முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி,்கமல் ஆகியோரின் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனது. இந்த நிலையில் இவர்களை விவாத்த்திற்கு அழைத்து இரு தரப்பில் அமர வைத்து விவாதம் செய்து கொண்டிருந்தார் கோபிநாத். அப்போது பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். ஒருவர் கூறும் பொழுது முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் பொழுது இவர்கள் கத்தும் சத்தம் தான் கேட்கும் படம் சுத்தமாக கேட்காது என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார்.
மற்றொருவர் பேசும் பொழுது முதல் நாள் படத்துக்கு செல்வது என்பது எனக்கு குழந்தை பிறக்கும்போது வருகின்ற அனுபவம் என்கிற ரீதியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய கோபிநாத் நீ பேசுவது எனக்கே காண்டாக இருக்கிறது. குழந்தை பிறக்கும் சமயத்துடன் திரைபடம் வெளியாதை ஒப்பிட்டு பேசுவதெல்லாம் ஓவராக இல்லையா? என்று அந்த நபரை திட்டினார். அமைதியாக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத்தையே இவர் இப்படி கோபப்படுத்திவிட்டாரே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television