“ஒருத்தருக்கு இல்ல…எல்லாருமே உருளைக்கிழங்கு தான்”!! நொந்து போன கோபிநாத்”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார்.

"ஒருத்தருக்கு இல்ல...எல்லாருமே உருளைக்கிழங்கு தான்"!! நொந்து போன கோபிநாத்"!! 1

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டுவந்துள்ளது.

இந்த வாரம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என சுவாரசியமான தலைப்பு ஒன்றை எடுத்து விவாதித்தது நீயா நானா எபிசொட். இதில் குழந்தைகள் ஒரு புறமும், மறுபுறம் பெற்றோர்களும் பங்கெடுத்து உரையாடினர். அப்போது பேசிய குழந்தை ஒன்று, “ஸ்கூலுக்கு வெரைட்டியா செய்து தரேனு சொல்லிட்டு தினமும், தயிர் சாதம்,உருளைக்கிழக்கு தான் தராங்க” என்று அழகாக மழலை மொழியில் பேசினார்.

மற்றொரு குழந்தை தனது அம்மா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். , “சார், ஒரு நாள் பருப்பு சாதம் பிடிக்கும்’னு தெரியா தனமா சொல்லிட்டேன், அதிலிருந்து தினமும் பருப்பு சாதம், உருளைக்கிழங்கே தான்…. உருளைக்கிழங்கை பார்த்தாலே கடுப்பா இருக்கு சார்”. உடனே கோபிநாத் எல்லாரும் உங்களோட டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வாங்க…என்ன தான் கட்டி கொடுக்குறாங்க’னு பார்ப்போம் என ஒவ்வொரு பாக்ஸ்ஸாக திறந்து பார்க்க, அனைத்திலுமே உருளைக்கிழங்கு தான்.

இதனை பார்த்து கடுப்பான கோபிநாத், “நம்ப மேலையும் நிறையவே தவறுகள் இருக்கு….குழந்தைகளுக்கு சுண்டல், கொழுக்கட்டை,பணியாரம் போன்றவற்றை செய்து கொடுக்காமல், ஒரே மாதிரியாக எப்போதும் இட்லி, தோசை இல்லையேல் உப்மா என இருந்தால் குழந்தைகள் எப்போதும் வாய்க்கு ருசியாக தான் கேட்பார்கள்…அதில் தவறில்லை என பேசி இருந்தார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்