தளபதி விஜயின் 65 வது படமான ‘பீஸ்ட்’ ஷூட்டிங் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸ் இல் நடைபெற்று வருகிறது. அப்பொழுது தல தோனி அவர்கள் அதே ஸ்டூடியோவில் கமர்ஷியல் ஷூட்டிங்கிற்காக வந்துள்ளார். இரண்டு நட்சத்திரங்களும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் மீதமுள்ள போட்டிகள் துபாயில் வருகிற செப்டம்பர்

மாதத்தில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதனால் தல தோனியும் சில நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். இன்று கிரிக்கெட்டின் தலயும் சினிமாவின் தளபதியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளனர். இருவரும் கேரவனில் உரையாடியுள்ளனர். பின்பு புகைப்படங்களும் எடுத்துள்ளனர். ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி
வரும் இயக்குனர் நெல்சனும் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவற்றை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. பின்னர் பீஸ்ட் படத்தின் நடன இயக்குனர் ‘சதீஷ்’ நெல்சனின் ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார். அவர் ‘ இது டூ மச். ஒரு போன் பண்ணி இருக்கலாமே. தேங்ஸ்’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டது போல் பதிவிட்டுள்ளார்.