உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படம் வருகிற மே 20ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது வெளியீடு தேதி நெருங்கி வரும் வேலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கி உள்ளது. படத்தின் டீஸர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிசாசு படத்திற்கு பிறகு அரசியலில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி, மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முன்பு போல் இல்லாமல் இனிமேல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொடுக்கும் படங்களில் மட்டும் நடிக்க முடிவு எடுத்து பார்த்து கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் “நெஞ்சுக்கு நீதி” மற்றும் மாமன்னன் படங்களில் இப்போது நடித்து வருகிறார். மாமன்னன் படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு முதலானோர் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.
அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படமான “ஆர்டிகிள் 15” படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கான இந்த படத்தில் உதயநிதியுடன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் பலர் நடித்துள்ளார். படத்தின் பாடல்களும் ட்ரையிலரும் வருகிற மே 9ஆம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது.
ஜாதிய ஒடுக்குமுறையை தட்டி கேட்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் உதயநிதி நடித்துளளார். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏவாக உதயநிதி நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Video Courtesy – Zee studios.