Categories: உலகம்

விசா பாஸ்போர்ட் இல்லாமல் நேபாளத்திற்கு சுற்றுலா ஏற்பாடு

தென்னிந்திய சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாத வகையில் சிறப்பு சுற்றுலா திட்டங்கள் நேபாளத்தில் செயல்படுத்தப் படுவதாக அந்நாட்டில் சுற்றுலா வாரிய முதன்மை மேலாளர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

விசா பாஸ்போர்ட் இல்லாமல் நேபாளத்திற்கு சுற்றுலா ஏற்பாடு 1

இதுகுறித்து சுனில் குமார் கூறுகையில் “இந்திய மாநிலங்களைப்போலவே இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற சீதோஷ்ண நிலையுடன், காண்பதற்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

குறிப்பாக புத்தா் பிறந்த இடமான லும்பினி, போக்ஹரா, தேசிய பூங்காக்கள், ஸ்கை டைவிங், ஜங்கிள் சபாரி, ராக் கிளைம்பிங், மவுன்டெய்ன் பைகிங், யானை போலோ போன்ற சாகச விளையாட்டுக்கள் உள்ளிட்டவைகள் நிறைந்த சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக திகழ்கிறது நேபாளம்.

எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்த நேபாள சுற்றுலா வாரியம் பல்வேறு சிறப்புத்திட்டங்களுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்நாட்டு சுற்றுலா வாரியம் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளன.

மேலும் விசா இல்லாமல் சென்று வரவும், இந்திய ரூபாய்களை எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதியும் இருப்பதால் இந்தியாவை சார்ந்தவர்களுக்கு பெரிய சிரமங்கள் எதுவும் இருக்காது.

நேபாளத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ‘நேபாள் சேல்ஸ் மிஷன்–2020’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் திருச்சி, கேரளத்தில் திருவனந்தபுரம், கொச்சின், மற்றும் ஜெய்பூா், சண்டிகா், அமிா்தசரஸ், சூரத், பூனே ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலா முகவா்கள் (டிராவல் ஏஜெண்ட்கள்) மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நேபாள சுற்றுலா குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்