300 ஏக்கரில் பண்ணை நிலம் – விவசாயம் முதல் மான் வேட்டை வரை.! நெப்போலியனின் அமெரிக்கா தோட்ட வீடியோ

வெளியிட்டது

நடிகர் நெப்போலியனின் அமெரிக்காவில் இருக்கும் 300 ஏக்கர் தோட்டத்தின் டூர் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல யூட்யூபர் இர்ஃபான் நெப்போலியனின் தோட்டதிற்கு சென்று அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

300 ஏக்கரில் பண்ணை நிலம் - விவசாயம் முதல் மான் வேட்டை வரை.! நெப்போலியனின் அமெரிக்கா தோட்ட வீடியோ 1

தமிழில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்கிற படத்தின் மூலமாக 1991ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். அதன் பின்பு ‘சீவலப்பேரி பாண்டி’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

பின்னர் இவர் ‘தாயகம்’, ‘சுயம்வரம்’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘தசாவதாரம்’ படத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனாக இவரது நடிப்பு பிரமிக்க வைத்தது.

இவர் கடைசியாக 2021ம் ஆண்டு வெளியான ‘அன்பறிவு’ படத்தில் முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். மொத்தம் 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

2010ம் ஆண்டுக்குப் பின் திரைத்துறையில் இருந்து முழுவதுமாக விலகிய அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மாற்றுத்திறனாளி ஆவார். இவரால் நடக்க முடியாது. வீல் சேரிலேயே இவர் தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வருகிறார்.

தன்னுடைய மகனின் மருத்துவத்திற்காக அவ்வப்போது அமெரிக்கா சென்று வந்த நெப்போலியன், பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டார்.

12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். 12,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக அந்த வீடு கட்டப்பட்டு இருக்கிறது. தனது மகனுக்காக பார்த்து பார்த்து அந்த வீட்டை அவர் கட்டியிருக்கிறார் நெப்போலியன்.

இது மட்டுமில்லாமல் 300 ஏக்கரில் விவசாய நிலம் ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் இருக்கும் காட்டில் மான் வேட்டை செய்வது, 250 மாடு, 3 பெட் ரூமுடன் பண்ணை வீடு, 1 ஏக்கரில் செயற்கை குளம், 16 லட்சத்துக்கு டைனிங் டேபிள், பார்ட்டி ஹால் என்று பிரம்மிக்க வைக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the below video..! 

Youtube Video Code Embed Credits: Irfan’s View

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்