Categories: சினிமா

எனக்கும் விஜய்க்கும் 15 வருஷமா சண்டை, இதான் உண்மையான காரணம்.! போட்டு உடைத்த நெப்போலியன்.!

வெளியிட்டது

நடிகர் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக கருத்து வேறுபாடினால் சண்டை இருந்து வருவதாகவும், அதனால் தான் அவருடன் பேசவில்லை என்றும் நெப்போலியன் தற்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சுமார் 66 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது 67வது படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் வருகிற பிப்ரவரி ஒன்று இரண்டு மூன்று ஆகிய தேதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்தார். லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியதன் மூலமாக மிகப் பிரமாண்டமான இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். விக்ரம் படம் துவங்குவதற்கு முன்பு ஒரு குட்டி டீசருடன் அந்தப் படத்தை துவக்கினார். அது போல இந்த படத்திற்கும் டீசர் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஏங்கி காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கும் விஜய்க்கும் 15 வருஷமா சண்டை, இதான் உண்மையான காரணம்.! போட்டு உடைத்த நெப்போலியன்.! 1

இந்த நிலையில் விஜய் குறித்து தற்போது நெப்போலியன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தானும் விஜயும் போக்கிரி படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது. எனக்கும் அவருக்கும் அதில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. 15 ஆண்டுகளாக நாங்கள் பேசிக் கொள்வதில்லை. மேலும் இந்தப் 15 ஆண்டுகளில் அவர் படங்கள் எதையுமே நான் பார்த்தது இல்லை, விஜய் என்னுடன் பேச தயார் என்றால் நானும் பேசுவதற்கு ரெடி. நான் விஜயுடன் பேச வேண்டும். அன்றைக்கு நடந்த சம்பவத்திற்கு பின்னர் நான் விஜயை பார்க்கவும் பேசவோ இல்லை. இந்நாளில் எனக்கு விஜய்யுடன் ஒரு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் தான் அதை மறுத்து விட்டேன். ஏற்கனவே தனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்ற காரணத்தை சொல்லி நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. காலம் முழுவதும் அவருக்கும் எனக்கும் ஏதோ பகை என்பது போல் இல்லை.

 

நெப்போலியன் தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய் விரும்பினால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று நெப்போலியன் பேசினார். மேலும் விஜய் தன்னுடைய அப்பா அம்மாவிடமே பேசாமல் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது, அது அமெரிக்கா வரையிலும் அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. முதலில் அவர் தனது தந்தை தாயுடன் சமரசமாகி பேசட்டும் அதன் பிறகு நாம் பேசுவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் நெப்போலியன் பேசினார். நீங்களும் அந்த காணொளியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Code Embed Credits: Touring Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்