தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் நெப்போலியன். தமிழில் பலவெற்றிப்படங்களை கொடுத்து சிறந்த நடிகர் என பெயரை எடுத்து இருந்தார். கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியவர் நெப்போலியன். இவர் தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் படங்கள் நடித்து இருக்கிறார். மேலும் அரசியலிலும் களம் இறங்கி மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார்.
தற்போது இவரின் மூத்த மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார். மேலும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு இவர் தற்போது மிகப்பெரிய தொழிலதிபர் ஆகியுள்ளார். மேலும் அமெரிக்காவில் சொந்தமாக வீடும் வாங்கியுள்ளார். இவர் மகன் தனுஷின் திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்று இருந்தது. நெப்போலியன் திருநெல்வேலியில் இருந்து தனது மகனுக்கு பெண் பார்த்து உள்ளார்.
தற்போது திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ளார். இவர் மகனின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. பல சினிமா நட்சத்திரங்களும் தனுஷ் திருமணத்தில் கலந்துகொள்ள வருகை தந்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.