Categories: சமூகம்

கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி!!

வெளியிட்டது
கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி!! 1

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தால் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்பட 9 பேர் வரை பலியாகியுள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

வீடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்