ஒரு பொண்ணை இப்படியா பண்ணுவீங்க..! Priyanka-க்கு ஆதரவாக களம் இறங்கிய Niroop..!

வெளியிட்டது

விஜய் டிவி பிரியங்கா மீது மணிமேகலை பரபரப்பான புகார் ஒன்றை வைத்து உள்ளார். மேலும் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் எனவும், பிரியங்கா தன்னை நிகழ்ச்சி நடத்தவிடுவதில்லை என கூறி இருந்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பொண்ணை இப்படியா பண்ணுவீங்க..! Priyanka-க்கு ஆதரவாக களம் இறங்கிய Niroop..! 1

மேலும் விஜய் டிவி பிரபலங்கள் தங்களது ஆதரவை ப்ரியங்காவுக்கு தெரிவித்து வருகின்றனர். மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை சொன்ன பலரும் தற்போது மணிமேகலைக்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்நிலையில் ப்ரியங்காவின் நெருங்கிய நண்பரும், பிக் பாஸ் பிரபலமுமான நிரூப், ப்ரியங்காவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பணத்திற்காக சிலர் பிரியங்காவை பற்றி மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் , வியூஸ்களை பெறுவதற்கு ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்