Categories: சினிமா

சாப்பாட்டில் கரப்பான்பூச்சியை கண்டு கடுப்பான நிவேதா பெத்துராஜ் புகார் !

வெளியிட்டது

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். தமிழ் நடிகையாக பல தமிழ் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட நிவேதா தமிழ் மட்டும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சாப்பாட்டில் கரப்பான்பூச்சியை கண்டு கடுப்பான நிவேதா பெத்துராஜ் புகார் ! 1

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான இவர் பொதுவாக என் மனசு தங்கம் , டிக் டிக் டிக் , திமிரு புடிச்சவன் , சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நேற்று இவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பாண்பூச்சி இருந்துள்ளது.

அதை கண்டு கோபமடைந்த நிவேதா அந்த புகைப்படத்தை வெளியிட்டு , சென்னை omr இல் உள்ள பிரபல உணவகத்தில் உணவு ஆர்டர் செய்தேன் , அதில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்தேன். இது முதல் முறை கிடையாது இரண்டாவது முறை. இதுபோன்ற உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட அவரது ரசிகர்கள் பலர் தங்களுக்கும் இது போண்டா அனுபவங்கள் அந்த ஹோட்டலில் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்