மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மரணமுற்றதற்கு வருத்தம் தெரிவித்து, இது போன்ற சம்பவங்கள் இனி தொடரக்கூடாது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “நாட்டின் எந்த மூலையிலும் குழந்தைகள் மரணமடைய கூடாது. மலைவாழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தேவையான தேவைகளை உடனடியாக ஏற்படுத்த மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் கூறுகையில், “மத்திய பிராதேசத்தில் அனைத்து வகையான வசதிகளும் நிறுவப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று கூறினார்.
மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் மூன்று மாவட்டங்களில் ஊட்ட சத்து குறைபாடு மற்றும் மோசமான பொது சுகாதாரம் காரணமாக சுமார் 1400 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.