Categories: சமூகம்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தம்!

டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற நால்வரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தம்! 1
நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளியான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் ஒருவர் சிறார் என்பதால் 3 ஆண்டு காலம் சிறார் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவர்களை தவிர முகேஷ் சிங், வினய் குமார், பவன் குப்தா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு துக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை மறுஉத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்