Categories: அரசியல்

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!

வெளியிட்டது
உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!! 1

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனுக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. மனு தாக்கலுக்கு 16 ஆம் தேதி கடைசி தினமாக அறிவித்திருக்கிறது. 17-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 19-ந் தேதி வரை மனுக் களை திரும்பப் பெறலாம்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவர், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ந் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் ஜனவரி 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந் தேதி பதவி ஏற்பார்கள்.அந்தந்த உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.இந்த தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் பழனிசாமி அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டணியில் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்