Categories: சமூகம்

ஒரு கிலோ 25க்கு விற்ற வெங்காயம்! வாங்க திரண்ட மக்கள்! கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் விற்பனை!!

வெளியிட்டது
ஒரு கிலோ 25க்கு விற்ற வெங்காயம்! வாங்க திரண்ட மக்கள்! கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் விற்பனை!! 1

வெங்காயத்தின் விலை கிலோ 200 வரை விற்பதால் பொதுமக்கள் பெரும் அளவில் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் கிலோ 25க்கு விற்கப்படும் தரம் குறைந்த வெங்காயம் (சிறிய ரகம்) ஒரு டன் (1000 கிலோ) அளவுக்கு நேற்று கடலூர் மார்க்கெட்டிற்கு வந்தது. இந்த வெங்காயம் 4 கிலோ 100 (கிலோ 25) என்ற அளவில் விற்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

இதுபற்றி கடலூர் மார்க்கெட் வியாபாரி பக்கிரான் கூறும் போது, பெங்களூருவில் விலை குறைவாக விற்கப்படும் தரம் குறைவான வெங்காயம் (சின்ன ரகம்) கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு டன் மட்டுமே வந்ததால் சில மணி நேரங்களில் விற்றது என்றார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்