விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குடித்துவிட்டு வந்ததால் ஓட்டேரி சிவாவை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் ஒன்றை அளித்து ஓட்டேரி சிவா பேசியிருக்கிறார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், சமையலுடன் சேர்த்து கோமாளிகள் செய்யும் அட்டகாசங்களை பார்த்து ரசிக்கும்படியாக இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்து வருகிறது. மூன்று சீசன்களை முடிந்து இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. பழைய கோமாளிகள் பலரையும் மாற்றிவிட்டு தற்போது புது கோமாளிகள் பலரையும் உள்ளே இறக்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய கோமாளிகளாக இருந்த சிவாங்கி பாலா உள்ளிட்டவர்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. புகழ், மணிமேகலை, சுனிதா, குரேசி உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே பழைய கோமாளிகளாக தொடர்கின்றனர். புதியவர்களாக ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா உள்ளிட்ட பலரையும் உள்ளே இறக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான ப்ரோமோவில் ஓட்டேரி சிவாவை காணவில்லை. அவர் மிகவும் குடித்துவிட்டு ஷூட்டிங்க்கு வந்ததாகவும், ஓவர் குடியில் மட்டையாகி விட்டதாகவும், சமைக்கும் பொழுது நிதானத்தை இழந்து சமைத்தார் என்றும் பல தகவல்கள் கொடிகட்டி பறந்தன. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது ஓட்டேரி சிவா சிறப்பு கோமாளியாக அழைக்கப்படுவார் என்று மட்டும் கூறப்பட்டிருந்தது.
தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கும் ஓட்டேரி சிவா கண்ணீர் மல்க பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தான் எப்போதும் குடித்ததே கிடையாது, என் அம்மா மீது சத்தியமாக நான் குடித்தது கிடையாது. நான் சாப்பிட கொடுத்தால் வயிறு நிரம்ப நன்றாக சாப்பிடுவேன் தவிர ஒருபோதும் குடித்ததில்லை. தற்போது நடிகர் விஷால் ஆபீஸில் தான் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் கேட்டுப் பாருங்கள். எனக்கு குடிக்கும் பழக்கமே கிடையாது என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Facebook Video Embed Code Credits: Aadhan Cinema