விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாவம் கணேசன் என்ற சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்த மாஸ்டர் நந்தா நடிக்கும் “கண்ணே கலைமானே” என்று தொடர் ஒளிபரப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது டாப் ஹிட் சீரியல்களை வழங்கிக் கொண்டிருக்கும் முக்கிய தொலைக்காட்சியாக விளங்குகிறது விஜய் டிவி. ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் டிவியில், கொஞ்சம் கொஞ்சமாக நாடகங்கள் உள்ளே புகுந்தன. ஆரம்பத்தில் ஒன்று இரண்டு நாடகங்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இணையாக மதியம் தொடங்கி இரவு வரை பல நாடகங்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாவம் கணேசன். இந்த தொடரில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன் ஹீரோவாக நடித்து வருகிறார். தனது சந்தோஷத்தை மறந்து தனது குடும்பத்திற்காகவே உழைக்கும் இளைஞன் பற்றிய ஒரு கதைதான் பாவம் கணேசன். தந்தை இல்லாமல் தாய் மட்டுமே தன்னையும் தனது சகோதர சகோதரிகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருவார் வளர்ந்த பின்பு அவர்களுக்கு துணையாக தனது குடும்பத்தை உழைத்து காப்பாற்றி வரும் ஒரு எளிமையான மனிதனின் கதைதான் பாவம் கணேசன். தந்தை இல்லாமல் சிறு வயது முதலே தாயார் பாதுகாப்பில் வளரும் ஒருவர் வளர்ந்த பின்பு வாட்டர் கேன் சப்ளை போடுவது, பேப்பர் போடுவது என்று தொடங்கி இன்சூரன்ஸ் ஏஜென்ட் வரை கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு ஒரு தம்பி இரண்டு தங்கை ஒரு அக்கா மற்றும் தாயார் அடங்கிய பெரிய குடும்பத்தை காப்பாற்றும் கதையாக எளிய குடும்பத்தின் பின்னணியை பிரதிபலித்ததால் மக்கள் இந்த கதையை விரும்பி பார்க்கத் தொடங்கினர்.
இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக குணா என்ற நூலில் நேகா கவுடா நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது முடிய இருப்பதாக கூறப்படுகிறது. மதியம் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு டிஆர்பி ரேட்டிங்கும் வெகுவாக குறைந்து விட்டதால் சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பதிலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை என்ற நடித்த மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கும் கண்ணே கலைமானே என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.