பஞ்சமி நில விவகாரம்: ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

பஞ்சமி நில விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என புகார் ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்தார். இதனை தொடர்ந்து சர்ச்சைகள் பெரிதானது.

இதுகுறித்து தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் ஏற்கனவே பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் முரசொலி அறக்கட்டளையை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆணையத்தின் முன் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி இதனை விசாரிக்கும் வரம்பு ஆணையத்திற்கு இல்லை என வாதிட்டார். மேலும் அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற அடிப்படையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது ஆணையம்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்