பலூனில் அந்தரத்தில் பறந்தபடி கர்ப்பகால புகைப்படங்கள் எடுத்த பாண்டவர் இல்லம் அனு.!

வெளியிட்டது

பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் அனு தற்போது தனது கர்ப்ப கால புகைப்படங்களை வித்தியாசமான முறையில் நடத்தி இருக்கிறார். அவருக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்கிற சீரியலில் நடித்து வருபவர் அனு. இந்தத் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரை காப்பி அடித்து எடுக்கப்பட்டது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இதில் பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டவர் குடும்பம் வெர்சஸ் ஜமீன் குடும்பம் என்ற இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையை மையமாக வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பலூனில் அந்தரத்தில் பறந்தபடி கர்ப்பகால புகைப்படங்கள் எடுத்த பாண்டவர் இல்லம் அனு.! 1

அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்தார். இதில் சிறப்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தொடராக சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்கிற தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். தற்போது இவர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் இவருக்கும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டா.ர் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நடிகை அனு. 7 மாதமாக இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை சமீபத்தில் அனு வெளியிட்டிருந்தார்.


எந்த ஆடம்பரமும் இல்லாமல் நண்பர்கள் யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே வைத்து தனது வளைகாப்பை நடத்தி இருந்தார் அனு. இந்த நிலையில் இன்று அவர் தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கர்ப்ப கால புகைப்படங்கள் என்று சொல்லப்படும் மேட்டர்னிட்டி புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். அதில் வித்தியாசமாக பலூன்கள் நிறைந்த ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்தபடி அந்தரத்தில் தொங்கியபடி அவர் அந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். கிரேன் உதவியுடன் அந்த போட்டோ சூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

 

இதை பார்த்த பலரும் அனுவிற்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். ஆனால் சிலரோ கர்ப்ப கால சமயங்களில் இது போல் ஆபத்தான முறையில் போட்டோக்களை எடுப்பது சரியல்ல என்று அணுவிற்கு அட்வைஸும் கொடுத்து வருகின்றனர். இப்படி ரிஸ்க் எடுத்து சரியான பாதுகாப்பு இல்லாமல் போட்டோ ஷூட் நடத்த வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்