பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனு விக்னேஷ் தற்போது தனக்கு பிறந்திருக்கும் மகனை முதன்முறையாக ரசிகர்களுக்காக காட்டியிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்திருந்த அனு தற்போது தனது மகனுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அவருக்கும் அவரது கணவர் மற்றும் குழந்தைக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்ல திறந்தது கனவு என்கிற சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனு விக்னேஷ். இவருக்கு இந்த நாடகம் பெரிய அளவில் கை கொடுத்ததால் அடுத்தடுத்து தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த சீரியலுக்கு பின்னர் ஆண்டாள் அழகர், விதி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். இவருக்கு அறிமுகத்தை கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கிற சிரியல் தான். பின்னர் அங்கிருந்து விலகி ஜீ தமிழுக்குச் சென்ற அவர் மெல்ல திறந்தது கதவு போன்ற நாடகங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபான ஆண்டாள் அழகர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விதி போன்ற நாடகங்களில் நடித்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்கிற சீரியலில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோலாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது பாசிட்டிவ் ரோலாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளமும் பெருகி இருக்கிறது.
இதற்கிடையில் 2017-ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆறு வருடங்களுக்குப் பிறகு அனு கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து இருந்தார். மேலும் தனது வளைகாப்பு புகைப்படங்களையும், கர்ப்பகால போட்டோ ஷூட்டுகளையும் நடத்தி அனைத்து புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.
கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார் அனு. பின்னர் பிரசவ அறையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது தனது கணவர் தன்னை எவ்வாறு பார்த்துக் கொண்டார் என்கிற வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பின்னர் தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தியையும், பெயர் சூட்டு விழாவையும் நடத்தி அந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தார். “வான் வியன்” என்று தன் மகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி அந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.
தற்போது தனது மகன் வான் வியனுடன் புதிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வான் வியனை பார்ப்பதற்கு அப்படியே அனுப் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டதால் மீண்டும் பாண்டவர் இல்லம் சீரியலுக்கு அனு திரும்புவாரா என்று தெரியவில்லை, ரசிகர்களும் மீண்டும் பாண்டவர் இல்லம் சீரியலுக்கு திரும்புங்கள் என்று அனுவிடம் கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர்.
Youtube Video Embed Code Credits: Anu Vignesh