‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை) தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் செந்திலுக்குதிருமணம் செய்து வைத்த கதிரை வீட்டை விட்டு வெளியே அடித்து துரத்துகிறார் பாண்டியன். அவரை மீனாவும் கோமதியும் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளனர். இதனால் பாண்டியன் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1. இந்த தொடர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 எடுக்கப்பட்ட நிலையில், மூன்று மகன்களுக்கும் தந்தைக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் டைட்டிலே “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்கிற அடையாளத்துடன் தான் தொடங்குகிறது. இந்த கதையில் பாண்டியனுக்கு சரவணன், செந்தில், கதிர் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் செந்தில் மீனாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் செந்தில் மீனாவை அழைத்துக் கொண்டு சென்று கோவிலில் திருமணம் செய்து வைக்கிறார்.
ஆனால் இந்த திருமணத்தை செந்திலின் தந்தை பாண்டியன் ஏற்றுக்கொள்ளவில்லை. செந்திலுக்கு திருமணம் செய்துவைத்த கதிரை வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கோமதியை அழைத்துக்கொண்டு கதிரை மீண்டும் வீட்டிற்கே அழைத்து வர மீனா புறப்படுகிறார். அதே போல மீண்டும் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வரும் பாண்டியன் கதிரைப் பார்த்து கோபத்தில் முறைக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television