திருட்டுத்தனமாக திருமணம் செய்யும் செந்தில்.! கோவிலுக்குள் என்ட்ரி கொடுத்த பாண்டியன்.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்ய இருக்கும் செந்தில் கோவிலில் மணக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து செந்திலின் தந்தை பாண்டியன் கோவிலுக்கு வருகை தருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருட்டுத்தனமாக திருமணம் செய்யும் செந்தில்.! கோவிலுக்குள் என்ட்ரி கொடுத்த பாண்டியன்.! ப்ரோமோ இதோ 1
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதை “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று சொல்லி தந்தை மற்றும் மூன்று மகன்கள் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாண்டியனுக்கு சரவணன், செந்தில், மற்றும் கதிர் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது மகன் செந்தில் மீனாவை காதலித்து வருகிறார். தனது தந்தைக்கு தெரியாமல் மீனாவை திருமணம் செய்ய செந்தில் கோவிலுக்கு கிளம்பி செல்கிறார்.


மூன்றாவது தம்பியாக இருக்கும் கதிரின் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. கோவிலுக்குள் மணக் கோலத்தில் செந்திலும் மீனாவும் அமர்ந்திருக்க, அந்த நேரம் பார்த்து பாண்டியன் கோவிலுக்குள் வருகிறார். இதனால் இவர்கள் இருவரின் திருமணம் நடக்குமா அல்லது தடைபடுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்