முல்லையின் வளைகாப்புக்கு வந்த ஜீவா மீனா.! மீண்டும் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முல்லையின் வளைகாப்பிற்கு வரும் ஜீவா, மீனா, கண்ணன் ஐஸ்வர்யா ஆகிய அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். மேலும் ஜீவா நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு தனது அண்ணன் தம்பிகளுடன் இணைந்து மேடையில் மாலை டம் டம் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்பப் பாங்கான தொடர்களில் முன்னிலை வகிக்கும் தொடராக இருக்கிறது. 4 அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டுக் குடும்பத்தின் அருமையையும் விளக்கும் ஒரு நாடகமாக இது இருந்து வருவதால் இந்த நாடகத்திற்கு பல கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லையின் வளைகாப்புக்கு வந்த ஜீவா மீனா.! மீண்டும் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.! 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூன்றாவது மருமகளாக இருக்கும் முல்லை, நான்காவது மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா, மூத்த மருமகள் தனம் ஆகிய மூவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர்.  இதில் முல்லைக்கு தற்போது ஆறு மாதங்கள் முடிவடைந்து இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரது தாயார் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முல்லைக்கு தற்போது வளைகாப்பு நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு சென்ற ஜீவா மற்றும் மீனா இருவரும் வருவார்களா என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்றனர். மேலும் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் இணைந்து பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.

ஆனால் இது கனவா இல்லை நினைவா என்று கேள்வியுடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. இது உண்மையில் நடந்ததா? இல்லை கனவா என்று தெரியவில்லை. இவர்கள் நால்வரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்