தனத்துக்கு நடக்கும் அறுவை சிகிச்சை.! பதற்றத்தில் மீனா முல்லை.! இனி நடக்கப்போவது என்ன?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த மூன்று வருடங்களாக இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராகவும் இது இருந்து வருகிறது. இதில் மூத்த மருமகளாக இருக்கும் தனம் கர்ப்பமாக இருக்கிறார். அதே சமயம் அவருக்கு மார்பக புற்றுநோயும் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனத்துக்கு நடக்கும் அறுவை சிகிச்சை.! பதற்றத்தில் மீனா முல்லை.! இனி நடக்கப்போவது என்ன? 1

குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்து விட்டு தனத்திற்கு உடனடியாக மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை தொடங்க வேண்டும் இல்லை என்றால் நோயின் தாக்கம் அதிகமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் ஒரு வழியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டு தற்போது தனத்தை திருச்சிக்கு அழைத்து சென்று இருக்கின்றனர். மீனாவும் முல்லையும் தனத்தை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனத்திற்கு நல்லபடியாக அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தி முடித்து இருக்கின்றனர்.

முல்லை மற்றும் மீனாவிடம் தனம் கண்கலங்கி நன்றி கூறுகிறார். நீங்கள் இருவரும் இல்லை என்றால் எனக்கு அறுவை சிகிச்சை நடந்து இருக்காது என்று சொல்லி கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி சொல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்