செந்திலுக்கு திருமணம் செய்து வைத்த கதிரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பாண்டியன்.!

வெளியிட்டது

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை) தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் செந்திலுக்கு தான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்கிற உண்மையை பாண்டியனிடம் கதிர் கூற, கோபமடைந்த பாண்டியன் தற்போது கதிரை வீட்டை விட்டு வெளியே அடித்து துரத்துகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1. இந்த தொடர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செந்திலுக்கு திருமணம் செய்து வைத்த கதிரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பாண்டியன்.! 1

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 எடுக்கப்பட்ட நிலையில், மூன்று மகன்களுக்கும் தந்தைக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் டைட்டிலே “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்கிற அடையாளத்துடன் தான் தொடங்குகிறது. இந்த கதையில் பாண்டியனுக்கு சரவணன், செந்தில், கதிர் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் செந்தில் மீனாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் செந்தில் மீனாவை அழைத்துக் கொண்டு சென்று கோவிலில் திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் செந்திலை பாண்டியன் ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதனால் பயந்து போன செந்தில் மீனாவை மீண்டும் வீட்டில் கொண்டு விட்டு வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் கதிர் இடையில் புகுந்து தான் இந்த திருமணத்தை செய்து வைத்ததாக கூற, கோபத்தின் உச்சிக்கே சென்ற பாண்டியன் கதிரை அடித்து துவைத்து வீட்டில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்