விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய தொடர்களின் மகா சங்கமம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ராஜி வீட்டில் இருந்து ஓடிப்போன செய்தியை தற்போது செந்தில் போன் செய்து மீனாவிடம் கூறுகிறார். இந்த விஷயத்தை மீனா, கோமதி மற்றும் கதிரிடம் கூற அவர்கள் ராஜி இருக்கும் இடத்தை நெருங்குகின்றனர். ஆனால் ராஜியை சந்திக்காமலே அவர்கள் போய் விடுகின்றனர். அந்த சமயம் பாக்கியா ராஜுக்கும் அவரது காதலருக்கும் இடையே நடக்கும் சண்டையை வெளியில் இருந்து பார்த்து விடுகிறார். எனவே பாக்யா ராஜியின் காதலனிடமிருந்து அவரை காப்பாற்றுவார் என்றே தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் இரு முன்னணி தொடர்களாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இரண்டு தொடர்களும் மகா சங்கமத்தை ஒளிபரப்பி வருகிறது. இதில் தற்போது கோமதியின் அண்ணன் மகளாக இருக்கும் ராஜிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஆனால் ராஜி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார். இதனால் திருமணம் நின்று போகிறது. இந்த நிலையில் இந்த செய்தி தற்போது மீனாவிற்கு தெரிய வருகிறது. மீனா மற்றும் கோமதி இருவரும் இணைந்து ‘பாக்கியலட்சுமி’ கேண்டீன் அவர்களின் உதவியாக சமைத்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போது பாக்யாவிற்கு ராஜியின் உண்மை நிலை தெரிய வருகிறது.
ராஜியை மிரட்டி அவரது காதலர் பணிய வைத்துக் கொண்டிருப்பதை பாக்யா பார்த்து விடுகிறார். எனவே பாக்யா தற்போது ராஜியை காப்பாற்றி அவரை கதிருக்கு திருமணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television