பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தனம் கர்ப்பமாக இருப்பது போன்ற ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பங்கான தொடர்புகளை எடுக்கும் விஜய் டிவி கூட்டுக் குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் அதிரடி திருப்பங்கள் ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டே வருகிறது. முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வாழ்ந்த வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்றார்கள். அங்கிருந்து பிரச்சினை தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதிரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சூப்பர் மார்க்கெட் கட்டிய இடம் விவசாய நிலத்தை சேர்ந்தது என்கிற காரணத்தினால் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அதிகாரிகள் வந்து உத்தரவிட, அந்த இடத்தை காலி செய்தனர். இதற்குப் பின்னால் மீனாவின் அப்பா ஜனார்த்தனனின் மிகப்பெரிய சதி இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த இடத்தை காலி செய்து விட்டு தற்போது தங்களது பழைய கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் வியாபாரத்தை துவங்கி இருக்கின்றனர். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இதுபோல் சோதனை காலமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கண்ணனுக்கு பேங்க் வேலை கிடைத்துள்ளது. அதை குடும்பமே கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் முல்லை மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர். இதனால் நாடகம் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனம் மீண்டும் வாந்தி எடுக்கிறார். மேலும் நாள் தள்ளி போகிறது என்றும் கூறுகிறார். இதனால் தனம் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கன்டென்ட் கிடைக்காமல் இப்படி எல்லாரையும் கர்ப்பம் ஆக்கி விடீர்களே? மீனா மட்டும் ஏன் சும்மா இருக்காங்க அவங்களையும் இரண்டாவது கர்ப்பம் ஆக்கி விட்ருங்க என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Video Below.!
Youtube Video Embed Code Credits: Vijay Television