விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய தொடர்களில் மகா சங்கமத்துக்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கும் கதிரை பாண்டியன் அடித்து துவைக்கிறார். மேலும் ராஜி கொண்டு வந்த பணத்தை உங்கள் அப்பனிடம் கொண்டு கொடுத்து விட்டாயா என்று சொல்லி ராஜியின் சித்தப்பா கதிரை மிகவும் மோசமாக நடத்துகிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு எதுவும் தெரியாதது போல கோமதி நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ மகா சங்கமம் தற்போது நடந்து வருகிறது. இதில் பாண்டியன் மற்றும் கோமதியின் மகனாக இருக்கும் கதிருக்கு அவரது அண்ணன் மகள், ராஜியை கோமதி திருமணம் செய்து வைக்கிறார். ராஜி காதலனுடன் ஓடி வந்து ஏமாந்து விட்டதால் அவர் தனது மகனுக்கு ராஜியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் பாண்டியன் விட்டுவிடுவார் என்று சொல்லி கோமதி தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வரும் கதிர் மற்றும் ராஜியை பாண்டியன் அடித்து துவைக்கிறார். மேலும் கொண்டு சென்ற பணத்தை எல்லாம் செலவாகிவிட்டது என்று கதிர் சொல்ல, “உன் அப்பனிடம் கொடுத்துவிட்டு நாடகமாடுகிறாயா?” என்று சொல்லி ராஜியின் சித்தப்பா கதிரிடம் சண்டைக்குப் போகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television