தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மீனா.! இனிமே வச்சி செய்ய போறாங்க.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பங்கான தொடர்களை எடுக்கும் விஜய் டிவி கூட்டுக் குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் அதிரடி திருப்பங்கள் ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டே வருகிறது. முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வாழ்ந்த வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்றார்கள். அங்கிருந்து பிரச்சினை தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மீனா.! இனிமே வச்சி செய்ய போறாங்க.! 1

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதிரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சூப்பர் மார்க்கெட் கட்டிய இடம் விவசாய நிலத்தை சேர்ந்தது என்கிற காரணத்தினால் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அதிகாரிகள் வந்து உத்தரவிட, அந்த இடத்தை காலி செய்தனர். இதற்குப் பின்னால் மீனாவின் அப்பா ஜனார்த்தனனின் மிகப்பெரிய சதி இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த இடத்தை காலி செய்து விட்டு தற்போது தங்களது பழைய கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் வியாபாரத்தை துவங்கி இருக்கின்றனர். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இதுபோல் சோதனை காலமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் முல்லை மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர். அந்த அதிர்ச்சியே குறையாத நிலையில் தற்போது தனமும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனமும் மூர்த்தியும் குழம்பி போய் இருக்க, வீட்டிற்கு வரும் தனத்தின் அண்ணணும் அண்ணியும் இந்த விஷயத்தை போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். ஏற்கனவே ஒரே வீட்டில் மூன்று பேரும் கர்ப்பமாக இருப்பது கேலிக்கு உள்ளாகி வரும் நிலையில் தனத்தின் இரண்டாவது கர்ப்பமும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. மீனா மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும்? அவரையும் கர்ப்பம் ஆக்கி விடுங்கள் என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.! அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Video Below.! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்