தனம் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் கூறப்போகும் மீனா.! அதிரடியான Pandian Stores ப்ரோமோ.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனத்திற்கு கேன்சர் இருக்கும் உண்மையை தற்போது மீனா வீட்டில் உள்ள அனைவரிடமும் கூற போவதாக சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கும் செய்தியை மீனா வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்வாரா? இல்லையா? என்பது குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களின் வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி தனம், ஜீவா மீனா, கதிர் முல்லை, கண்ணன் ஐஸ்வர்யா என்று நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், நான்கு மருமகள்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையும் குறித்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதால் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனம் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் கூறப்போகும் மீனா.! அதிரடியான Pandian Stores ப்ரோமோ.! 1

கூட்டுக் குடும்பமாக இருந்த இவர்களின் குடும்பத்தில் கண் பட்டது போல தற்போது இந்த குடும்பம் இரண்டு மூன்றாக உடைந்து சிதைந்து இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக இணைந்திருக்கிறது. தற்போது கதைப்படி மூத்த மருமகளாக இருக்கும் தனம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்கு இடையே அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதனால் மருத்துவரை அணுகி சோதித்துப் பார்த்தபோது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்த பின்பு தான் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இதை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் தனம் மறைத்து வைக்கிறார். மேலும் ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு விழாவை நடத்தி விட்டு இந்த உண்மையை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறலாம் என்று இரண்டாவது மருமகளாக இருக்கும் மீனாவிடம் சத்தியமும் வாங்குகிறார். தற்போது ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பும் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது.


இந்த நிலையில் இந்த உண்மையை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறலாமா வேண்டாமா என்று தனம் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்கள் இப்படியே நேரத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால் சிகிச்சை தாமதமாகிக் கொண்டே இருக்கும். எனவே நான் இப்போதே வீட்டில் உள்ள அனைவரிடமும் இந்த உண்மையை கூற போகிறேன் என்று சொல்லி மீனா செல்கிறார். ஆனால் அவரை சொல்ல வேண்டாம் என்று சொல்லி தனம் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்கிறார். இருந்தபோதிலும் மீனா வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மையை கூறப்போவதாக செல்கிறார். அந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்