பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நேற்று முல்லைக்கு வயிற்றில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கதிருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்த செய்தியை மருத்துவர் வந்து கூற உணர்ச்சி பெருக்கில் கதிர் கண் கலங்கிய கதறி அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கொடுத்து மக்களின் மனம் கவர்ந்த தொடர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாமல் இருந்து வருகிறது. இதில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என்று நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டுக்குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக இந்த நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரண்டாவது தம்பியான ஜீவா தனது சகோதரர்களிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாமனார் உடன் வசித்து வருகிறார். அதேபோல கடைசி தம்பி கண்ணனும் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். வீட்டில் இருந்து வெளியேறிய கண்ணன் தனிக் குடித்தனத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தவணை முறையில் பொருட்களை வாங்கியிருந்தார். ஆனால் அதை திரும்ப கட்ட முடியாத கண்ணனை அதிகாரிகள் அடித்து விட அங்கிருந்து மீண்டும் பிரச்சினை தொடங்கியது. இது ஒரு புறம் இருக்க கதிருக்கு இருக்கும் தனிப்பட்ட எதிரி கதிரை பழி வாங்குவதற்காக அவர் மீது பைக்கை விட்டு ஏற்ற முயற்சி செய்ய அப்போது குறுக்கே வரும் அவரது மனைவி முல்லை மீதும் பைக் மோதி விடுகிறது. கர்ப்பிணியாக இருக்கும் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து அவருக்கும் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவரை தூக்கி கொண்டு கதிர் மருத்துவமனையில் அனுமதிக்க, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார் முல்லை.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முல்லைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை மருத்துவர் வந்து கூறுகிறார். இதனால் வீட்டில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் கதிரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததாகவும், கண் கலங்க வைக்கும் படியாக இருந்ததாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமாவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video…!
YouTube Video Embed Code Credits: Vijay Television