விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பாண்டியன்_ தங்க மயிலை ஓவராக புகழ்ந்து கொண்டிருப்பதால் கோமதி, மீனா, ராஜி என அனைவருக்கும் தங்கமயில் மீது எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கமயில் சமைத்த உணவை ருசி பார்க்கும் பாண்டியன் இத்தனை வருடங்களில் இது போல் சாப்பிட்டதில்லை என அளவுக்கு அதிகமாக புகழ்ந்து கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் கோமதி இத்தனை வருடம் நான் சமைக்கிறேன் என்றாவது என்னை புகழ்ந்திருக்கிறீர்களா? என கேட்டு பாண்டியனிடம் கோபப்படுகிறார். பின்னர் மீனா மற்றும் ராஜியை தங்கமயிலை பார்த்து கற்றுக் கொள்ளுமாறும் அவர் கூறுகிறார். இதனால் கோமதி, மீனா, ராஜு என அனைவரும் தங்கமயில் மீது கோபத்தில் இருக்கின்றனர்.
மேலும் வேலை முடித்து வீட்டிற்கு வரும் பாண்டியன் தங்க மயிலை அழைத்து முக்கியமான விஷயம் ஒன்றை கூற வேண்டும் என கூறுகிறார். அப்போது கோமதி ஆவேசமாக அவர்களை நோக்கி வருகிறார். இதனால் வீட்டில் மிகப் பெரிய சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television