கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைத்த பாக்யா.! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தற்போது கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைத்த பாக்யா.! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்.! 1

விஜய் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் ஒன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் பாண்டியன், அவரது மனைவி கோமதி, மகன்கள் சரவணன், செந்தில், கதிர் என்று சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலின் கதைப்படி பாண்டியனின் மனைவி கோமதி வீட்டை விட்டு ஓடி வந்து தான் பாண்டியனை திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் கோமதியின் அண்ணன்கள் கோமதி மீதும், பாண்டியன் மீதும் கோபத்தில் இருக்கின்றனர். இரு குடும்பமும் எதிர் எதிர் வீட்டில் இருக்கும் நிலையிலும் ஒருவர் ஒருவர் பேசிக் கொள்வதில்லை.

இந்த நிலையில் கோமதி போலவே, கோமதியின் அண்ணன் மகளும் தற்போது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். தன்னுடைய அண்ணன் தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்கிற கோபத்தில் கோமதி திருச்செந்தூருக்கு செல்கிறார். அங்கு பாக்யா சமையல் காண்ட்ராக்ட்டுக்காக வந்திருக்கும் நிலையில் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, கோமதியும், பாக்யாவும் இணைந்து சமையல் ஆர்டரை செய்து கொண்டிருக்கின்றனர்.

காதலனுடன் ஓடி வந்த ராஜியும் கோமதி இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது கோமதிக்கு தெரிய வந்து அவர் ராஜியை கண்டிக்கிறார். உன்னால் அண்ணன் தூக்கில் தொங்கப் போகிறார் என்று சொல்லி கோமதி ராஜியை திட்டி தீர்க்கிறார். இதனால் ராஜி தற்போது தற்கொலை முடிவு எடுப்பதற்காக அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார்.

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் பாக்கியா, செல்வி, அமிர்தா, எழில் ஆகியோரும் கலந்து கொண்டனர் தற்கொலை முடிவெடுத்த ராஜியை காப்பாற்றி அவருக்கு பாக்கியா கதிருடன் திருமணத்தை செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்