சபையில் வைத்து மூர்த்தியை நாக்கை புடுங்குவது போல கேள்வி கேட்ட ஜீவா.! கதறி அழுத தனம்..!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமண வீட்டில் வைத்து மொய் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜீவா மூர்த்தியை தாறுமாறாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மூர்த்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். மேலும் சமாதானம் பேச வரும் தனத்தையும் முகத்தில் அடித்தாற் போல பேசி ஜீவா அனுப்பிவிட்டார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது மூர்த்திக்கும் ஜீவாவிற்கும் இடையே மிகப் பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறது. தனது அண்ணனை இவ்வளவு நாள் எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத ஜீவா, தற்போது சபைக்கு நடுவே நிற்க வைத்து நாக்கை புடுங்கி கொள்வது போல தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டிருக்கிறார் மூர்த்தி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சபையில் வைத்து மூர்த்தியை நாக்கை புடுங்குவது போல கேள்வி கேட்ட ஜீவா.! கதறி அழுத தனம்..! 1
எந்த விஷயம் செய்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சேர்ந்துதான் செய்வார்கள். ஆனால் ஜீவாவின் மனைவி மீனாவின் தங்கை திருமணத்திற்கு மொய் வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மூர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று மொய் வைக்குமாறு கண்ணனிடம் சொன்ன நிலையில், கண்ணன் தனித்தனி பெயரில் மொய் வைத்து விட்டார். இதை தெரிந்து கொண்ட மீனாவின் அப்பா தனது மூத்த மகள் மற்றும் மருமகனின் பெயர் இல்லை என்று கோபம் கொள்கிறார். இதை அவர் மீனாவிடம் சொல்ல, மீனா ஜீவாவிடம் இது பற்றி கூறுகிறார். இதனால் மனம் உடைந்து போன ஜீவா, நேராக தனது அண்ணன் மூர்த்தியிடம் சென்று இது குறித்து கேட்கிறார். அப்போது தான் கண்ணனிடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்று சொல்லிதான் 50000 மொய் வைக்க சொன்னேன். ஆனால் கண்ணன் இவ்வாறு செய்து விட்டான் என்று சொல்லி கண்ணனையும் கோபத்தில் அறைந்து விடுகிறார். இதனால் கண்ணனும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் இத்தனை நாள் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அனைத்து விஷயங்களையும் மூர்த்தியிடம் போட்டு உடைத்து விடுகிறார். கதிர் கார் வாங்கும் போது கூட தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, கதிர் எங்கு சென்றாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் சென்றால் உங்களிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும் என் மாமனார் வீட்டிற்கு செய்யக்கூடாது எனக்கு உரிமை இல்லையா, எனக்காக யாருமே இல்லை, என்னிடம் காசு இல்லை, நான் அவமானப்பட்டு நிற்கிறேன், எல்லாம் உங்களால் தான் என்ற ரீதியில் மூர்த்தியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஜீவாவின் கருத்தில் நியாயம் இருப்பதால் பதில் அளிக்க முடியாத மூர்த்தி கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார். அப்போது சமாதானம் பேச வரும் தனத்தின் முகத்தில் அடித்தார் போல பேசி விடுகிறார் ஜீவா. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் இந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்