பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யாவிற்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. குறிப்பாக முல்லைக்கும் ஐஸ்வர்யாவிற்கும் பெரும் வாக்குவாதமே ஏற்படுகிறது. மேலும் கண்ணனும் கதிரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பப் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. கூட்டுக்குடும்பமாக இருந்த அவர்கள் தற்போது உடைந்து துண்டு துண்டாக மாறியிருக்கின்றது.கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பொழுது மற்ற தம்பிகள் அனைவரும் தனித்தனியாக சம்பாதித்து வர அண்ணனுடன் சேர்ந்து குடும்பம் கடை என்று இருந்த ஜீவா, மற்ற சகோதரர்களால் பயங்கரமாக அசிங்கப்படுத்தப்படுவதாக உணர்கிறார். தம்பிகள் கார் வாங்குகிறார்கள், அரசு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள், ஆனால் தன்னால் தன்னுடைய மனைவிக்கோ குழந்தைக்கோ ஒரு சிறிய பொருள் கூட வாங்க முடியவில்லை என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தவிப்பு ஒரு கட்டத்தில் கோபமாக மாற தன தனது அண்ணன் மற்றும் தம்பிகளுடன் மிகுந்த சண்டை போடுகிறார் ஜீவா. இந்த சண்டை மொய் விஷயம் வரை செல்ல, மொய் எழுதுவதில் அவருடைய பெயரை விட்டுவிட்டு மற்ற அனைவரும் மொய் வைத்து விட்டனர். இது மூர்த்தியின் தவறில்லை என்ற போதிலும் கண்ணன் செய்த தவறினால் நடந்ததுதான். ஆனால் இதை ஜீவா பெரிதாக எடுத்துக்கொண்டு தனது அண்ணன் தம்பி என அனைவரிடமும் சண்டை போட்டு விட்டார். மேலும் தனது மாமனருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனை தற்போது வீட்டில் பூதாகரமாக வெடித்த வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா தனது கணவர் கண்ணனை கைநீட்டி அடித்தது தவறு என்றும், தனம் ஒன்றும் கண்ணனின் அம்மா இல்லை என்றும் கோபமாக பேசுகிறார். மேலும் கதிர் கண்ணனிடம் உன் மனைவியை பேசாமல் இருக்க சொல் நம் அண்ணி எவ்வளவு நாள் நம்மை பிள்ளை போல் வளர்த்தார் அதையெல்லாம் அவர்கள் சொல்லிக் காட்டினார்களா? ஆனால் உன் மனைவி சிறியதாக ஏதோ செய்து விட்டு அதை சொல்லிக் காட்டுகிறார் என்று கோபமாக கேட்கிறார்.
கதிருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட அப்போது முல்லை குறுக்கிட்டு ஐஸ்வர்யாவிடம் அமைதியாக இருக்கச் சொல்கிறார். அப்போது குறிப்பிடும் ஐஸ்வர்யா உங்கள் கணவரை ஏதாவது சொன்னால் உங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது அல்லவா அது போல் தான் என் கணவர் கண்ணனை சொன்னால் எனக்கு கோபம் வரும் என்று சண்டை போடுகிறார் மேலும் படபடவென்று வார்த்தைகளை அள்ளி விடுகிறார். இதனால் கோபமான மூர்த்தி வார்த்தைகளை பார்த்து பேசு என்று கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television