பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா? ரொம்ப அழகா இருக்கு மீனா..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ள இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் நம்பர் 1ல் உள்ளது. இதில் மீனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். யதார்த்தமான நடிப்பால் பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்த போதிலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று சொல்லலாம். இயல்பான பேச்சும், சிரிப்பும், யதார்த்தமான நடிப்பும், கணவன் வீட்டையும் விட்டுக் கொடுக்காமல், தந்தையையும் விட்டுக் கொடுக்காமல் நடுவில் இருந்து படாதபாடு படும் இவரின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா? ரொம்ப அழகா இருக்கு மீனா..! 1

இவர் ஹேமா டைரி என்ற யூடியூப் பக்கத்தை கொரோனா காலத்தில் தொடங்கினார். தொடங்கிய சில நாட்களிலேயே பல லட்சம் பின் தொடர்பவர்களை பெற்றுவிட்டார். ஆரம்பத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை தொடங்கினார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான பாயும் புலி என்ற தமிழ் படத்தில் சிறிய ரோலில் நடித்தார். பின்னர் ஆறாது சினம் படத்தில் விமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சவரக்கத்தி, இவன் யாரென்று தெரிகிறதா போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு இடையே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் என்ற நாடகத்திலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்ற நாடகத்திலும் துணை வேடங்களில் நடித்தார்.

தொடர்ந்து தென்றல், குலதெய்வம், விதி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். அதற்குப் பின்னர் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017 முதல் இந்த தொடரில் நடித்து வருகிறார். தற்போது ஹேமா தனது வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் அவர் பதிவேற்றி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

 

Youtube Video Code Embed Credits: Hema’s Diary

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்