பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஜீவா விலகிட்டாரா? ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து ஜீவா விலகிவிட்டார் என்று பல நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இணையத்தில் கசிந்துள்ள ஒரு வீடியோ அதை உறுதி செய்து இருக்கிறது. புது ஜீவாவுடன் அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்து வருகிறது. இந்த சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஜீவா விலகிட்டாரா? ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ 1

ஜீவாவுக்கு ஜோடியாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார். அதில் நியூ ஜீவா என்ற கேள்வியுடன் அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் முல்லை கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருக்கிறார். ஆனால் அதற்குள் குழந்தை இல்லை. அதற்கு பதிலாக பேட்டரி ஃபேன் ஒன்று இருக்கிறது. பின்னர் அந்த வீடியோ அங்கும் இங்கும் காட்டப்படுகிறது மீனாவின் பின்னால் புது ஜீவா என்று சொல்லக்கூடியவர் நின்று கொண்டிருக்கிறார். பழைய ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் காணவில்லை.

 


எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து ஜீவா விலகி இருப்பது உறுதியாக இருக்கிறது. மேலும் அவர் அதே டிவியில் கிழக்கு வாசல் என்கிற சீரியலில் நடித்து வருவதால் விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்