கதிரு வீட்டுக்கு வந்துடுடா.! கண் கலங்க வச்சிடீங்கப்பா.! அண்ணன் தம்பி பாசம்னா இதான்

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சமையல் போட்டியில் ஜெயித்து மீண்டும் கதிர் வீட்டிற்கு திரும்பி இருக்கும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு முக்கியமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகளின் கூட்டுக் குடும்பம் பற்றியும் அவர்களது ஒற்றுமை பற்றியும் அழகாக எடுத்துப் கூறும் ஒரு தொடராக இது இருந்து வருகிறது. இதில் மூன்றாவது தம்பியாக வரும் கதிர் தனது மனைவியின் குழந்தையின்மை மருத்துவத்திற்காக மீனா அப்பாவிடம் லட்சம் கணக்கில் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி செலுத்தி முடியாததால் வீட்டில் பெரும் சண்டை ஏற்பட்டு கதிர் வீட்டை விட்டு வெளியேறினார்.

கதிரு வீட்டுக்கு வந்துடுடா.! கண் கலங்க வச்சிடீங்கப்பா.! அண்ணன் தம்பி பாசம்னா இதான் 1

அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தான் மீண்டும் வீட்டிற்கு வருவேன் என்று கதிர் சபதம் எடுத்து இருந்தார். தற்போது கதிரும் முல்லையும் ஒரு சமையல் போட்டியில் கலந்து கொண்டனர். அங்கு பல தடைகளை மீறி அவர்கள் 10 லட்சம் ரூபாயை வெற்றி பெற்று இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மூர்த்தி கதிரிடம் மீண்டும் நீ வீட்டிற்க்கே வந்து விடு, நீ இல்லாமல் வீடு வீடாகவே போலவே இல்லை என்று கண்ணீருடன் கூறுகிறார். அதற்கு கதிரும் சரி என்று கூறிவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு இரண்டு பேரும் திரும்புகின்றனர். அவர்களை தனம் ஆனந்த கண்ணீருடன் வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார்.

உள்ளே சென்ற உடனேயே போட்டியில் வென்ற 10 லட்ச ரூபாயை தனத்திடம் கதிர் கொடுத்து நாங்கள் வாங்கிய கடனவ திருப்பி அடைத்து விட்டதாக கூறுகிறார். அப்போதே மீனா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். தனது கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கதிர் கடைசிவரை போராடி அந்த பணத்தை வென்று, சொன்ன சொல்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்க்கு திரும்பி இருக்கிறார். அந்த அழகிய ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்