விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் தற்போது சீசன் 2-வை இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு உருவாகி உள்ளனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் மருமகள் தங்க மயிலை பாராட்டுவதால் கோமதி பயங்கர கடுப்பாகிறார். இதனால் பாண்டி அவரை சமாதானம் செய்ய வீடியோ கால் அடித்து , ரொம்ப அழகாக இருப்பதாக கூறுகிறார். இதனை கேட்ட கோமதி சந்தோஷத்தில் மெய்மறந்து வெட்கத்தில் சிரிக்கவே, அங்கு வந்த மீனா மற்றும் ராஜி அதனை பார்த்து விடுகின்றனர்.
மேலும் கோமதியை கலாய்க்கவும் செய்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வார சீரியலை காண ஆவலாக இருப்பதாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION