விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், சரவணன் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்ய தங்கமயிலிடம் ஆதார் கார்ட் கேட்கிறார் பாண்டி. ஆதார்கார்டில் ஒரிஜினல் வயது இருப்பதாகவும், அது சரவணனை விட அதிகம் என்பதால் அதை மறைக்க திட்டமிடுகிறார் தங்கமயில். அதனால் மாமாவிடம், ஆதார் கார்டு அம்மா வீட்டில் இருப்பதாக கூறுகிறார்.
மயிலின் இந்த பதற்றம் மீனாவுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. எதையோ மயில் மறைப்பதாக உணர்கிறார் மீனா. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் மயில் விரைவில் மாட்டுவார் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION