ஐயயோ அது உண்மை இல்லை பொய்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை கதறல்..!

வெளியிட்டது

விஜய் டிவியில் நாயகிகளை தேர்ந்தெடுக்க ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிதான் கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் ஷாலினி. நடன கலைஞரான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையிலும், தனது கணவரின் ஆதரவுடன் சின்னத்திரையை கலக்கி வருகிறார்.

ஐயயோ அது உண்மை இல்லை பொய்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை கதறல்..! 1

இந்த நிகழ்ச்சியில் தனது திறமைகளை காண்பித்து அசத்தி இருந்தார். இந்த போட்டியின் மூலம் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வது சீசனில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. பலருக்கும் விருப்பமானவராக ஷாலினி மாறியுள்ளார். இவர் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறார். இவரின் நடனத்தை காணவே இன்ஸ்டாகிராமில் பெரிய கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இவர் சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். அந்த பதிவில் , நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகிறது, அது உண்மை இல்லை. நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் என கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்