விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீஸன் 2. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 தொடருக்கு மக்கள் பேராதரவு வழங்கி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சீசன் முடிவுக்கு வந்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மீனாவை அவரது தந்தை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார். இதனால் கடுப்பாகிய செந்தில் மீனாவின் தந்தையை நேரில் சந்தித்து தான் மிகப்பெரிய அரசு அதிகாரியாக ஆவேன் என சவால் விடுகிறார். இதனை கேட்ட மீனா தந்தை கடும் அதிர்ச்சி அடைந்து பேச முடியாமல் நிற்கிறார்.
அண்ணன் சவால் விட்டதை வீடியோ எடுத்த கதிர் அதனை மீனாவிடம் காண்பிக்கவே, மீனா நெகிழ்ச்சி அடைந்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனாவுக்காக செந்தில் செய்வதை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION